பெரியவங்க எல்லாருக்கும் வணக்கம். என் பேரு ஜோனத்தன். அம்மா அப்பா எனக்கு இந்த பேர வச்சாங்க. ஜோனத்தன் அப்படீன்னா கடவுளின் பரிசுன்னு அர்த்தமாம். என்னைய ஜோனா, ஜோனா குட்டி, செல்லக்குட்டினு எல்லாரும் கொஞ்சி கூப்பிடுறாங்க.
நான் இந்த வருசம் (2006)ஆகஸ்டு நாலாம் தேதி பொறந்தேன்!
இராத்திரி முழுசும் அம்மா, பாட்டி, தாத்தா, சித்தி எல்லாரையும் தூங்க விடாம ஜாலியா இருந்தேன். அப்பா பாவம் லீவு கிடைக்காம என்னைய பாக்க வர முடியாம கஷ்டபட்டாங்க. ஆங், அதுக்கு தான் இப்போ அமெரிக்கா வந்ததும் அப்பாவ தூங்க விடாம விளையாடுறேனே! தூங்க விடமா கண்ணை முழிச்சிட்டு இருக்கதால என்னைய 'புட்டான்'னு (தும்பி) கேலி பண்ணுறாங்க.
நான் பொறந்து 20 நாள்ல எங்கம்மாவும், சித்தியும் பிளேன்ல அமெரிக்கா கூட்டிட்டு வந்தாங்க. தாத்தா வச்சிருக்க காரை விட பிளேன் பெருசு. புதுசா நிறைய ஆட்கள் இருந்தாங்க. எல்லாரும் என்னைய பார்த்து சிரிச்சிட்டே இருந்தாங்க. பிளேன்ல வந்தவங்க எல்லாரும் என்னைய "சமத்து பையன் அழவே இல்ல" னு சொன்னாங்க.
இப்போ ஒரு வாரமா எனக்கு solid food குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. மொதல் ரெண்டு நாள் கரண்டிய சூப்பி சூப்பி பார்த்தேன் உள்ளே ஒண்ணும் போகல. இப்போ கொஞ்சம் சாப்பிடுறேன். அம்மா அப்பாக்கு என்னைய பாக்கிறது நல்ல சந்தோசம். தாத்தா, பாட்டி என்னை கவனிக்க அமெரிக்கா வந்திருக்காங்க. அம்மா டாக்டர் வேலைய விட்டுட்டு என்னோட விளையாடுறாங்க. அப்பாவும் தினமும் ஆஸ்பத்திரில இருந்து வந்ததும் என்னோட விளையாடிட்டே இருப்பாங்க.
சித்தப்பா எனக்கு இந்த பிளாக் தொடங்கி வச்சிருக்காங்க! வளர்ந்ததும் நானே எழுதுவேன், அது வர சித்தப்பா என்னைய பத்தி உங்களுக்கு சொல்லுவாங்க. நீங்க சொல்லுறத மறக்காம எனக்கும் சொல்லிடுவாங்க (ஆனாலும் சித்தப்பா மோசம், என்னைய இன்னும் பாக்க வரல). சரி நான் வறேன். தூக்கமா இருக்கு.

3 comments:
உலகுக்கும் வலைப்பூவுக்கும் நல்வரவு ஜோனா!
அப்பவே ஒரு பின்னூடமிட்டேன், வந்துச்சான்னு தெரியல...
பெற்றோர் ரெண்டு பேருமே மருத்துவர்கள்னா உனக்கு 3 மாசத்துலயே "சாலிட்ஸ்" (திட உணவு) ஆரம்பிச்சது தான் ஆச்சரியமா இருக்கு. குறைஞ்சது 4 மாசத்துக்கும் மேல தான் ஆரம்பிக்கச் சொல்றாங்க.. 4 மாசம் வரைக்கும் திட உணவைப் புறந்தள்ளும் reflex அதிகமா இருக்குமே? அமெரிக்கக் குழந்தைநல மருத்துவர் சங்கம் என்ன சொல்லுதுன்னா 6 மாசத்துல ஆரம்பிச்சாக் கூட நல்லதுன்னு சொல்லுதே? ஏன் உனக்கு இவ்ளோ சீக்கிரம் ஆரம்பிச்சாங்களாம்னு அப்பா அம்மா கிட்ட நிச்சயம் கேளு.
ஜோனாவின் சிரிப்பில் என்னை மறந்துவிட்டேன். ஜோனாவின் சித்தப்பா நல்ல காரியம் செய்கின்றார். இம்மாதிரியான் புது முயற்சி உண்மையில் நன்றாக இருக்கின்றது. இன்னும் எதிர்பார்க்கின்றேன்.

Post a Comment