நான் தவழ்கிறேனே மம்மி! முன்னாடி போக நினைச்சு உந்தி உந்தி முயற்சி பண்ணுனாலும் பின்னாடி தான் விழுறேன். எல்லாரும் சுத்தி இருந்து சிரிக்கிறாங்க. பெரியவங்க யாரும் சின்ன புள்ளை எனக்கு உதவி செய்யிறாங்க இல்ல. நீங்களாவது உதவிக்கு வறீங்களா?
நான் இந்த வருசம் (2006)ஆகஸ்டு நாலாம் தேதி பொறந்தேன்! நான் பொறந்து 20 நாள்ல எங்கம்மா பிளேன்ல அமெரிக்கா கூட்டிட்டு வந்தாங்க.
அம்மா அப்பாக்கு என்னைய பாக்கிறது நல்ல சந்தோசம். தாத்தா, பாட்டி என்னைய கவனிக்க அமெரிக்கா வந்திருக்காங்க.