Thursday, November 23, 2006

மழலை மொழி


நான் டி.வி பாத்துட்டு இருந்தேனா, ஆச்சி வந்து விடாம அன்புத்தொல்ல பண்ணி என்னய பேச வச்சுட்டாங்க. வீடியோல நான் நல்லா பேசுறேனா? நாங்க பேசுறது பத்தி ஒரு பெரிய்யயயயயய தாத்தா கூட குறள்னு என்னமோ எழுதியிருக்காராமா?

நான் தூங்கிட்டனா


எல்லாரையும் வேல வாங்கி கழைப்பில நான் சித்தி மடியில தூங்கிட்டனா, அம்மா அப்பா இந்த படத்த எடுத்திருக்காங்க! நல்ல கழைப்பா இருந்திருக்கேன் இல்ல? :)

Tuesday, November 21, 2006

நான் நல்லாயிருக்கேனா?


நான் முதல் முறையா கவுந்து படுத்தப்போ எடுத்த படமாம்! நீங்களும் சின்ன பிள்ளையா இருந்தப்போ இப்படி தான் கவுந்தீங்களா? நல்லாயிருக்கா? சீக்கிரம் நடக்கிற படத்தையும் பாப்பீங்க :)

Monday, November 20, 2006

நான் வளர்கிறேனே அம்மா

என்னோட சிம்மாசனம் நல்லாயிருக்கா? பாத்தீங்களா யாரும் பக்கத்தில இருந்து புடிச்சுக்காம நான் தனியா இருக்கறேன்! வளந்திட்டேன் இல்ல?

என் ஆக்சன்


இப்படி தான் நான் எனக்கு பசிக்கிறப்போ கைய வைக்கிறேனா. உடனே பால் பாட்டில் கையில தறாங்க! நான் நல்ல விதமா கேக்க ஆரம்பிச்சிட்டேனில்ல? How about some milk?

நானு


நான் பொறந்து பத்து நாளுல எடுத்த படமாம் அம்மா, அப்பா சொல்லுறாங்க. நான் அழகா இருக்கேனா?சின்ன பிள்ளையா இருந்திருக்கேன் இல்ல?

Sunday, November 19, 2006

சிரிக்கிறேன்

இத பாருங்க நான் பேசுறேன். அம்மாவ கூப்பிட்டு சிரிக்கிறேன்.

நானு!


நான் அழகா இருக்கேனா?

என்னோட வயசு 3 மாசம் 15 நாள்


பெரியவங்க எல்லாருக்கும் வணக்கம். என் பேரு ஜோனத்தன். அம்மா அப்பா எனக்கு இந்த பேர வச்சாங்க. ஜோனத்தன் அப்படீன்னா கடவுளின் பரிசுன்னு அர்த்தமாம். என்னைய ஜோனா, ஜோனா குட்டி, செல்லக்குட்டினு எல்லாரும் கொஞ்சி கூப்பிடுறாங்க.

நான் இந்த வருசம் (2006)ஆகஸ்டு நாலாம் தேதி பொறந்தேன்!

இராத்திரி முழுசும் அம்மா, பாட்டி, தாத்தா, சித்தி எல்லாரையும் தூங்க விடாம ஜாலியா இருந்தேன். அப்பா பாவம் லீவு கிடைக்காம என்னைய பாக்க வர முடியாம கஷ்டபட்டாங்க. ஆங், அதுக்கு தான் இப்போ அமெரிக்கா வந்ததும் அப்பாவ தூங்க விடாம விளையாடுறேனே! தூங்க விடமா கண்ணை முழிச்சிட்டு இருக்கதால என்னைய 'புட்டான்'னு (தும்பி) கேலி பண்ணுறாங்க.

நான் பொறந்து 20 நாள்ல எங்கம்மாவும், சித்தியும் பிளேன்ல அமெரிக்கா கூட்டிட்டு வந்தாங்க. தாத்தா வச்சிருக்க காரை விட பிளேன் பெருசு. புதுசா நிறைய ஆட்கள் இருந்தாங்க. எல்லாரும் என்னைய பார்த்து சிரிச்சிட்டே இருந்தாங்க. பிளேன்ல வந்தவங்க எல்லாரும் என்னைய "சமத்து பையன் அழவே இல்ல" னு சொன்னாங்க.

இப்போ ஒரு வாரமா எனக்கு solid food குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. மொதல் ரெண்டு நாள் கரண்டிய சூப்பி சூப்பி பார்த்தேன் உள்ளே ஒண்ணும் போகல. இப்போ கொஞ்சம் சாப்பிடுறேன். அம்மா அப்பாக்கு என்னைய பாக்கிறது நல்ல சந்தோசம். தாத்தா, பாட்டி என்னை கவனிக்க அமெரிக்கா வந்திருக்காங்க. அம்மா டாக்டர் வேலைய விட்டுட்டு என்னோட விளையாடுறாங்க. அப்பாவும் தினமும் ஆஸ்பத்திரில இருந்து வந்ததும் என்னோட விளையாடிட்டே இருப்பாங்க.

சித்தப்பா எனக்கு இந்த பிளாக் தொடங்கி வச்சிருக்காங்க! வளர்ந்ததும் நானே எழுதுவேன், அது வர சித்தப்பா என்னைய பத்தி உங்களுக்கு சொல்லுவாங்க. நீங்க சொல்லுறத மறக்காம எனக்கும் சொல்லிடுவாங்க (ஆனாலும் சித்தப்பா மோசம், என்னைய இன்னும் பாக்க வரல). சரி நான் வறேன். தூக்கமா இருக்கு.