Monday, January 15, 2007

நான் வலைப்பூவில எழுதுறேன்



பாத்தீங்களா! நானே இப்போ வலைப்பதிய ஆரம்பிச்சிட்டேன். :)

Saturday, January 13, 2007

நானும் பொம்மைகளும்




என்னைய நான் விளையாடுற பொம்மைகளோட சேத்து வச்சிருக்காங்க :) என்னையும் பொம்மையா பாக்கிறாங்களா? :)

நாளைக்கு பொங்கல்னு சொல்லுறாங்க. அதுக்கு என்ன செய்வாங்க? எங்க வீட்டுல எதாவது செய்வாங்களா தெரியல.

மொதல் கிறிஸ்துமஸ் கேக்

நான் மொத மொதலா வெட்டின கேக் இது தான்! அப்பா என் கையில கத்திய குடுத்து எனக்கு உதவியா கைய பிடிச்சு வச்சிகிட்டாங்க. நல்ல அப்பா. அம்மா பக்கத்துல நின்னு ஆசை ஆசையா பாத்து படம் புடிச்சாங்க. தாத்தா, பாட்டிக்கு ரொம்பபபப... சந்தோசம். எங்க முதல் கிறிஸ்துமஸ் நல்லா இருந்துச்சி. சித்தி, சித்தப்பா மோசம். என்னைய பாக்கவே வரல!

நான் தவழ்கிறேனே!



நான் தவழ்கிறேனே மம்மி! முன்னாடி போக நினைச்சு உந்தி உந்தி முயற்சி பண்ணுனாலும் பின்னாடி தான் விழுறேன். எல்லாரும் சுத்தி இருந்து சிரிக்கிறாங்க. பெரியவங்க யாரும் சின்ன புள்ளை எனக்கு உதவி செய்யிறாங்க இல்ல. நீங்களாவது உதவிக்கு வறீங்களா?

Wednesday, January 10, 2007

மொதல் கிறிஸ்துமஸ்



எனக்கு இது மொதல் கிறிஸ்துமஸ். அம்மா எனக்கு சட்டை வாங்கி தந்தாங்க. அப்பா என் கையை பிடிச்சு கேக் வெட்ட வச்சாங்க. இந்த படத்தில நான் அழகா இருக்கேனா?